திலினி பிரியமாலியிடம் என்னுடைய வாகனத்தை வழங்கவில்லை-முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Sri Lanka Murutthettuwe Ananda Thero
By Steephen Oct 14, 2022 11:39 AM GMT
Report

நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்பவரிடம் தனது ஜீப் வண்டியை வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

வாகனத்தை திலினி பிரியமாலியிடம் வழங்கவில்லை பிரியங்கா ஜயசேகர என்பவரிடம் வழங்கினேன்

திலினி பிரியமாலியிடம் என்னுடைய வாகனத்தை வழங்கவில்லை-முருத்தெட்டுவே ஆனந்த தேரர் | Thilini Priyamali Muruthettuve Ananda Thero

வசந்த சமரசிங்க சமூக ஊடங்களில்  கூறுவது போல் நான் எனது ஜீப் வண்டியை திலினி பிரியமாலியிடம் வழங்கவில்லை. வசந்த சமரசிங்க, இவ்வாறு பொய்களை கூறி, மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த தலைவர்களை அவமதிக்க வேண்டாம். அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்து குறித்து நான் வருத்தப்படுகிறேன்.

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரான பிரியங்கா ஜயசேகர என்பவரிடமே வழங்கினேன். ஜப்பானில் இருந்து எனக்கு வாகனம் ஒன்று அன்பளிப்பாக கிடைக்கவிருந்த காரணத்தினால், இதுவரை பயன்படுத்தி வந்த வீ.8 ஜீப் வண்டியை விற்பனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதனடிப்படையில் வாகனத்தை விற்று பணம் தருவதாக பிரியங்கா ஜயசேகர கூறினார். எனினும் அந்த பணம் எனக்கு கிடைக்கவில்லை.

பிரியமாலி என்ற பெண்ணை இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை

திலினி பிரியமாலியிடம் என்னுடைய வாகனத்தை வழங்கவில்லை-முருத்தெட்டுவே ஆனந்த தேரர் | Thilini Priyamali Muruthettuve Ananda Thero

சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது. பிரியங்கா ஜயசேகரவும் அந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகி இருப்பவர்.

எந்த வகையிலும் திலினி பிரியமாலி என்ற பெண்ணை இதற்கு முன்னர் நான் அறிந்திருக்கவில்லை எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் பல பௌத்த பிக்குமார், திலினி பிரியமாலியின் நிறுவனத்தின் முதலீடு சம்பந்தமான விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி இருந்தன.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கடந்த காலங்களில் பெரும் ஆதரவவை வழங்கி வந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர முக்கிய பங்காற்றிய தலைமை பௌத்த பிக்குகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US