பாரிஸ் நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாதீபம் திலீபனின் நினைவேந்தல் (Photos)
பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் 10ம் வட்டாரத்தில் தமிழர்களின் வர்தக மையான “ குட்டி யாழ்ப்பாணம்” என அழைக்கப்படும் சப்பல் La Chapelle பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபமாகிய திலீபனின் நினைவு நாளான இன்று (26.09.2023) காலை 10.48 மணிக்கு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு பிரான்சை தளமாக இயங்கும் சே நூ தமிழ் Ç’est Nous les Tamouls அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 15ம் திகதி முதல் செப்படம்பர் 26ம் திகதிவரைபாரிஸ் 10ம் வட்டார காவல்துறை மற்றும் நகரசபையின் அனுமதியுடன் பொதுமக்கள் வணக்கம் செலுத்துவதற்காக தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் திலீபனின் 12 நாட்கள் உண்ணாவிரதம் குறித்த விளக்கமளிக்கப்படும் பதாகையும் பிரஞ்சு மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இது பிரெஞ்சு மக்களையும், பாரிஸின் சுற்றாலாவாசிகளினது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் வாழும் தமிழ் மக்களும் , பாரிஸின் லா சப்பல் பகுதியின் தமிழ்
வர்த்தகர்களும் இவ் நினைவேந்தலில் கலந்துகொண்டு தீலிபனுக்கு நினைவஞ்சலி
செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.