அத்தியாவசிய பொருட்களை கூட விட்டுவைக்காத திருடர்கள் (Video)
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று(17) இரவு 11.00மணியளவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த முதியவர்களின் கைகளைக் கட்டிவிட்டு வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இயக்கச்சி பகுதியில் வசித்து வந்த இரு முதியவர்கள் மற்றும் அவரது மாற்றுத்திறனாளியான மகன் ஆகியோர் உறக்கத்திலிருந்துள்ளனர்.
அதன்போது முதியவர்களின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த முதியவர்களின் கைகளைக் கட்டிவிட்டு வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் அங்கர், சீனி உட்பட சில பொருட்களும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வளர்த்த கோழிகள், பணம், நகை என்பனவும் திருடியுள்ளனர்..
குறித்த சம்பவத்தில் முதியவர்கள் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இயக்கச்சி பகுதியில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் அதிலும் அத்தியாவசிய பொருட்கள் திருட்டுப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினேகா - பிரசன்னா ஜோடியின் மகன், மகளின் சமீபத்திய புகைப்படங்கள்.. எப்படி வளர்ந்துவிட்டார்கள் என்று பாருங்க Cineulagam
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri