முகமாலை பகுதியில் நூதன முறையில் திருடிய திருடர்கள்: பொலிஸார் தீவிர விசாரணை
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலையில் உள்ள கிராமப்பகுதியில் அமைந்துள்ள சிறிய பல்பொருள் வாணிப உரிமையாளரான பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை நூதனமான முறையில் திருடியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பல்பொருள் வாணிபத்திற்கு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர்.
கடைக்கு ஒருவர் செல்ல மற்றவர் மோட்டார் சைக்கிளில் நின்றுள்ளார். கடைக்குள் வந்த நபர் கடையிலிருந்த பெண்ணிடம் பொருட்கள் சிலவற்றைக் கேட்டுள்ளார்.
அவர் கேட்ட பொருளைக் கடை உரிமையாளரான பெண்மணி எடுக்க முற்பட்ட வேளை குறித்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்து அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
முகமாலை பகுதியில் தொடர்ச்சியாகத் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாகப் பளை பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
