ஒரே இரவில் நான்கு கோவில்களில் கைவரிசையை காட்டிய திருடர்கள்..
வவுனியா கந்தபுரம், தவசிகுளம் பகுதியில் நேற்றையதினம் இரவு நான்கு கோவில்களில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் இரவு குறித்த கோவில்களிற்குள் உள்நுளைந்த திருடர்கள் அங்கிருந்த கதவினை உடைத்து உண்டியல்களை திருடிச்சென்றுள்ளதுடன், ஒலிபெருக்கி சாதனங்களையும் களவாடி சென்றுள்ளனர்.
கந்தபுரம் பிள்ளையார் கோவில் மற்றும், அம்மன் கோவில், பொன்னாவரசங்குளம் பிள்ளையார்கோவில், தவசிகுளம் வைரவர் கோவில், கோவில்களிலேயே குறித்த திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
சில கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தினை மாத்திரம் எடுத்துச் சென்றுள்ளதுடன், உண்டியல்களை ஆலய வளாகத்திலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.
தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam