சிசிரிவி கமராவில் பதிவான திருடன் : அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
மட்டக்களப்பில் சிசிரிவி கமராவில் பதிவாகிய மோட்டார் சைக்கிள் திருடனை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் மட்டக்களப்பு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற திருடன் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளார்.
இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் மட்டு.தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு இன்று (20.08.2023) பொதுமக்களிடம் மட்டக்களப்பு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த மாதம் 2ஆம் திகதி குறித்த வீதியில் பேல்சர் ரக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ள நிலையில் அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சிசிரிவி கமராவில் குறித்த திருடர் பதிவாகியுள்ளமை தொியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
