யாழில் வீடொன்றில் காணாமல்போன கைபேசிகள்! இளைஞரை மடக்கி பிடித்த மக்கள் (Photos)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, பத்தமேனி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரொருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி
பத்தமேனி பகுதியில் வீட்டில் தனியே வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டுக்கு நேற்று குறித்த இளைஞன் சென்று வீட்டு வளாகத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர் அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்த பெண்மணி தனது இரண்டு பெறுமதியான கைபேசிகள் காணாமல்போயிருந்தமை தொடர்பில் அவதானித்து அயலவர்களிடம் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வீட்டு வளாகத்தை துப்பரவு செய்த இளைஞர் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அன்று இரவு அவர் வீட்டிற்கு வந்த போது ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
சிறிய கத்தி மீட்பு
சந்தேகநபரிடம் விசாரித்தபோது, பெண்மணி தனியே வீட்டில் இருப்பதனால் அவருக்கு பாதுகாப்பாக இருக்கவே தான் வந்ததாக கூறியுள்ளார்.
மேலும், கைபேசி தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
இதனையடுத்து, இளைஞரிடம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது அவரிடமிருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஒடிக்கொலன் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதன்பின்னர் அவர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
