தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம்.
எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு.
முறுகல் நிலை
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதையும் , பொலிஸார் பாரபட்சம் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேணும் என பணித்துள்ளோம்.

கட்சி, ஜாதி, இனம், மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி, அனைவரும் ஒரே இனம் என்ற சூழலை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படமாட்டாது.
அதேபோன்று வடக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் , வடக்கில் சிறப்பான சேவையை மேலும் மேம்படுத்தவும் , வடக்கில் உள்ள இளையோரும் பொலிஸ் சேவைகளில் தாமாக முன்வந்து இணைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.