செம்மணி தொடர்பில் தேரரின் சாதகமான கருத்து
வடக்கில் செம்மணி உட்பட இலட்சக்கணக்கான மனிதப் புதைகுழிகளில் குற்றவியல் இராச்சியம் நடத்தப்பட்டுள்ளதாக தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த அரசாங்கத்தில் கூட இதற்கு நீதி நிலைநாட்டப்படுவதாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம்(1) நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் உரையாற்றும் போதே இதனைக் கூறியுள்ளார்.
பயங்கரவாத செயற்பாடு
தொடர்ந்து உரையாற்றிய அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வடக்கில் பல பகுதிகளுக்கு சென்று செம்மணி உட்பட இலட்சக் கணக்கான மனித புதைகுழி அவலங்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்தது.

ஆனால் அதற்கான எவ்வித செயற்பாடுகளையும் ஆரம்பித்ததாக தெரியவில்லை. செம்மணியில் கைக்குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைக்குழந்தைகள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனரா?எவ்வாறு அவர்களை பயங்கரவாதிகளாக்குவது.
ஆகையால் இவற்றுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டம் எமது நாட்டுக்கு தேவையில்லை.ஆதலால் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.