தமிழில் நயினாதீவு: சிங்களவர்களுக்கு நாகதீப - வெளிநாட்டில் இலங்கை என்றால் தெரியுமா..! தேரர் காட்டம்
புத்தர் சிலையோ, இந்து தெய்வத்தின் சிலையோ எதுவாக இருந்தாலும் அது இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நயினாதீவிற்கு சிங்களத்தில் கூறுவது நாகதீப என்று. அதை அப்படி கூறக்கூடாது என்றால் யாழ்ப்பாணத்தை யாப்பன என சொல்லக் கூடாது. வெளிநாட்டிற்கு சென்று இலங்கை என்று சொன்னால் யாருக்கும் தெரியும்?
ஸ்ரீலங்கா என்று சொன்னால் தானே தெரியும். அதேபோன்று தான் தமிழில் நயினாதீவு. சிங்களவர்கள் தெரிவிக்கும் போது நாகதீப என குறிப்பிடுவார்கள். இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் கடவுள் அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். நாகபூசணி அம்மன் இருக்க வேண்டும் நயினாதீவு ஆலயத்தில். அது தான் மகிமை.
புத்தர் சிலையோ, இந்து தெய்வத்தின் சிலையோ எதுவாக இருந்தாலும் அது இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும்.
வீதியிலும், கண்ட கண்ட இடங்களிலும் வைக்க கூடாது. முஸ்லிம்களை பாருங்கள் அவர்களின் சிலைகள் ஏதேனும் வீதியில் இருக்கிறதா? நம்முடையவர்கள் மாத்திரம் தான் இந்த வேலையை செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
