எனது அரசியலை மழுங்கடிக்க முயற்சி - எம்.எஸ்.தௌபீக் (Photos)
திருகோணமலை மாவட்ட மக்களின் மருந்து தேவைகளை ஓரளவேனும் அரச ஒசுசல மூலம் நிவர்த்திக்க முடியும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் (M.S.Thoubek) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவில் முதலாவது அரச ஒசுசல மத்திய நிலையம் இன்று (5) திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் அரச ஒசுசல நிலையமொன்றினை நான் திருகோணமலை மாவட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று நான் நினைத்த கனவு நினைவடைந்து விட்டது.
இன்று மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை கொள்வனவு செய்ய முடியும். இம்மாவட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் செயலில் காட்டுவதில்லை, மாறாக கதைகளிலே செயற்பாடுகளை வெளிக்காட்டுவார்கள். மக்களுக்கு தெரியும்.
எனக்கெதிராக பல்வேறு வகையான சூழ்ச்சிகளை செய்து வருகின்றார்கள். எனது அரசியலை மழுங்கடிப்பதற்காக. அது முடியாத காரியம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
மிக நீண்டகாலமாக எமது திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்பார்த்திருந்த அரச மருந்தக கூட்டுத்தாபணத்தின் ஒசுசல நான் எடுத்த முயற்சியின் பயனாக நிறுவியுள்ளேன்.
கிண்ணியா பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக இந்நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத யஹம்பத், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கபில அத்துக்கொரல, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் அஸ்மி மற்றும் ஏனையோர் கலந்துகொண்டனர்.





அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
