இராணுவமயம் பற்றிய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை:பாதுகாப்பு செயலாளர்
நாடு இராணுவமயப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
சில ஓய்வு பெற்ற படை அதிகாரிகள் அரசாங்க பதவிகளை வகிப்பது இராணுவமயப்படுத்தலாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படை அதிகாரிகளின் நீண்ட கால அனுபவத்தை காத்திரமான முறையில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசத்தை கட்டியெழுப்பும் முனைப்புக்களில் முப்படையினரின் பங்களிப்பு மிக முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பிரிவினைவாதத்திற்கு இனி இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
