அமைச்சர் அளுத்கமகேவை பாதுகாக்க எவருமில்லை : ஐ.மக்கள் சக்தி
உங்களை பாதுகாக்க எவரும் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன(Rohini Kavirathna), கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கமத்தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரோஹினி கவிரத்ன, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாத்திரமல்லாது ஆளும் கட்சியினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahinda Aluthgamage), ஜனாதிபதி, நாடாளுமன்றம், விவசாயிகள், நுகர்வோர் ஏமாற்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) நேற்று கூறினார்.
எனினும் அமைச்சரை, கமத்தொழில் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், உற்ற நண்பர்கள் குழு என அனைவரும் இணைந்து ஏமாற்றியுள்ளனர் என்பதை மிகவும் கவலையுடன் கூறுகிறேன்.
தற்போது அமைச்சர் மகிந்தானந்த தனித்து யுத்தம் செய்ய வேண்டியுள்ளது. உங்களை காப்பாற்ற தற்போது யாருமில்லை. உங்களை காப்பாற்றிய மக்கள் மீண்டும் ஒரு முறை உங்களை காப்பாற்ற முன்வர மாட்டார்கள் என்பதையே என்னால் கூற முடியும் என ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
