நாட்டின் பிரச்சினைகளை கேட்க எவரும் இல்லை: முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆதங்கம்
நாட்டில் தற்போது பிரச்சினைகளை கேட்க எவரும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாராஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இங்கிலாந்து மகாராணியிடம் இந்த பிரச்சினைகள் குறித்து தெளிவுப்படுத்த தான் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது தகுதியற்றவர்கள் பெரிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் தகுதியானவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் முதலில் பீ.பி. ஜயசுந்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
