10-12 மணித்தியால மின்சார தடையா..! மறுக்கும் ஆணைக்குழு!
அடுத்துவரும் 2-3 மாதங்களில் 10-12 மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிலர் இதுபோன்று தகவல்களை வெளியிட்டு வந்தாலும், தற்போதைய தரவுகளின் அடிப்படையில் நீண்ட மின்வெட்டு தேவையில்லை என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் இன்று தகவல் வழங்கிய அவர், நீரேந்து பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்து வருவதாகவும், எதிர்காலத்தில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
தற்போதைய காலநிலை காரணமாக காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை விசாகப்பண்டிகை நாளான ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடை செய்யப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
