வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க டொலர் இல்லை
வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க டொலர் இல்லை என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாடுகளின் தூதரகங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதியளவு டொலர்கள் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக நத்தார் பண்டிகைக்கு முன்னதாக டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படுவது வழமை என்ற போதிலும் இம்முறை அரசாங்கத்திற்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக சில தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தகவலை அரசாங்கத் தரப்புக்கள் எவையும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
இரு ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூடும் இலங்கை

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
