தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தின் 60ஆவது ஆண்டு பூர்த்தி
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தின் 60ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வைரவிழா நிகழ்வானது 11.10.2025 - சனிக்கிழமை மல்லாகம் பழம்பதி தேவஸ்தானத்திலிருந்து கலை கலாசார பண்பாட்டு அம்சங்களுடன் கூடிய நடைபவனியுடன் மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகி நிகழ்வுகள் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நடைபெற்றது.
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத் தலைவர் பொ.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஆசியுரையினை மாவை ஆதீன முதல்வர் மகாராஜாஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் மற்றும் மருதனார்மடம் ஸ்ரீ அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ இ.சுந்தரரேஸ்வரக் குருக்கள் ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகனும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தர்மகர்த்தா சபைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தனும், கௌரவ விருந்தினர்களாக நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், தெல்லிப்பழை பிரதேச செயளாளர் சிவகெங்கா சுதீஸ்ணர் மற்றும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான குரு சிவப்பிரம்மஸ்ரீ இ.பிரசன்னவதனக் குருக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வைரச்சங்கமம்
60ஆவது ஆண்டு நிறைவாக "வைரச்சங்கமம்" எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டதுடன் வீணைக்கச்சேரி, கோவலன் கண்ணகி நாடகம் மற்றும் தெய்வீக இசைச்சங்கமம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
