யாழில் வீடுடைத்து தங்க நகைகள் திருட்டு
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
விரிவுரையாளரது குடும்பம் அன்றையதினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.
வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 50 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாட்டில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam