மன்னாரில் அரச சார்பற்ற நிறுவனத்தில் திருட்டு - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
மன்னாரில் உள்ள அரச சார்பற்ற நிறுவனத்தில் இடம் பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் பணியாளர்களை அச்சுறுத்தியமை
தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும், மன்னார் பொலிஸார் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமை குறித்து அரச சார்பற்ற
நிறுவனம் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நேற்று (02.10.2022) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னாரில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினுள் நபர் ஒருவர் உட்புகுந்து பணியாளர்களை அச்சுறுத்தியமை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸார் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை
இந்நிலையில் குறித்த அலுவலகத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 27ஆம் திகதி 2வது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் இரு முறைப்பாடுகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் பொலிஸார் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என அரச சார்பற்ற நிறுவனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த இரு முறைப்பாடுகளுக்கும் மன்னார் பொலிஸார் உரிய தீர்வை பெற்றுக கொடுக்காமை குறித்து குறித்த நிறுவனத்தினர் நேற்று வவுனியா மனித
உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
