சுகாதார அமைச்சுக்குள் சர்ச்சைக்குரிய பெண் - ரகசியங்கள் கசிந்தமை எப்படி?
பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சில் இருந்து விலகிய பின்னர் அந்த அமைச்சில் இருந்த மூன்றரை இலட்சம் பெறுமதியான கணினி உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றி பெண் ஊழியர் ஒருவரால் இவை திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊழியர் சுகாதார அமைச்சில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
அமைச்சரவை திருத்தத்தின் பின்னர் கடந்த புதன்கிழமை குறித்த பெண் சுகாதார அமைச்சின் லேஸர் கலர் பிரின்டர் மற்றும் அதற்கான நிறங்களை கொண்டு சென்றுள்ளார்.
இந்த உபகரணங்கள் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சராக செயற்பட்ட போது பயன்படுத்திய பொருட்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த உபகரணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அமைச்சின் பாதுகாப்பு பிரிவினர் அவற்றை சோதனையிட்டுள்ளனர். இது தொடர்பிலான விசாரணைகளில் அந்த பணிப்பெண் இரகசியமாக அதனை கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி செயற்படும் போது அவரது தனிப்பட்ட உதவியாளராக இந்த பெண் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த பெண் தடுப்பூசி செலுத்துவது உட்பட சுகாதார அமைச்சின் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவர் தலையிட்டு செயற்பட்டுள்ளதாக சுகாதார தகவல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் எடுக்கும் தீர்மானங்களை தொழிற்சங்கத்திடம் வழங்கும் நடவடிக்கையிலும் அந்த பெண் ஈடுபட்டுள்ளமை தெரியவந்தள்ளது.
மேலும் குறித்த பெண் தற்போது போக்குவரத்து அமைச்சில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
