பிரித்தானிய பெண்ணை மிரட்டி பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு! தீவிர விசாரணையில் பொலிஸார்
ராகம - நாகொட பிரதேசத்தில் பிரித்தானிய பெண்ணொருவரின் வீட்டிற்குள் இருவர் புகுந்து கொலை மிரட்டல் விடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 60 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் வைரம் பதித்த காதணி மற்றும் வைரப் பதக்கத்தை திருடப்பட்டதோடு 3,400 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 1,603,400 என ரத்கம பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

விசாரணைகள்
குறித்த பொருட்களை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர்கள் இருவரைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய ரத்கம பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam