கோண்டாவில் பகுதியில் திருட்டு சம்பவம்: பொலிஸாரின் அதிரடி செயல்(Photo)
யாழ்ப்பாணம்-கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிட பொருட்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான கட்டிட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
கட்டிட பொருட்கள்


இதன்போது, நிலமாபிள்கள், கழிவறைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், மின் மோட்டார் மற்றும் மின் வயர்கள், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
புலனாய்வு பிரிவினர்
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் துரிதமாக செயற்பட்ட கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan