பாடசாலையில் பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருட்டு : கமராவில் சிக்கிய சிறுவன்
வவுனியா தாண்டிக்குளம், பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி திருடப்பட்டமை தொடர்பில் நேற்றையதினம் (13.01.2024) பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

சிறுவனை கண்டுபிடிக்க நடவடிக்கை
இச்சம்பவம் தொடர்பில் பாடசாலைக்கு இன்று (14.01.2024) காலை விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசீரீவி காணொளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர்.
இதன்போது, கடந்த வெள்ளிக்கிழமை (12.01.2023) மதியம் 3.29 மணியளவில் 15 வயது மதிக்கத்தக சிறுவன் ஒருவன் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசீரீவியில் பதிவாகியுள்ளது.

சிசீரீவி காட்சியின் உதவியுடன் அவ் சிறுவனை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை பாதுகாவலர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam