பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனால் கையை இழந்த இளைஞர்கள்
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் போதை பொருள் சுற்றிவளைப்பிற்காக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் நபரின் கை வெட்டி துண்டாக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது. இதற்கு முன்னர் களுத்துறை குற்ற விசாரணை பிரிவிற்கு போதை பொருள் சுற்றிவளைப்பிற்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் இளைஞர்கள் இருவர் கத்தியால் வெட்டப்பட்டு கைகள் துண்டாக்கப்பட்டிருந்தன.
அவர்கள் வழங்கிய தகவலுக்கமைய 40 கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த போதை பொருள் பாணந்துறை குடு சலிந்து என்பவருடையதென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுவரையில் நாட்டைவிட்டு தப்பி சென்றுள்ள சலிந்துவின் ஒப்பந்ததிற்கமைய கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சத்து என்ற பாதாள உலக குழு உறுப்பினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்து என்ற சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடிய போது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கதிர்காமம் பொலிஸாரினால் 5 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.