இராணுவ சிப்பாய்க்கு போதைப்பொருள் வழங்கி கொள்ளையில் ஈடுபடுத்திய இளைஞர்
அங்கவீனமான இராணுவ சிப்பாய் உட்பட மூன்று பேருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுத்தி வந்த 21 வயதான இளைஞருடன் அந்த கொள்ளை குழுவை தாம் கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபரான 21 வயதான இளைஞர் எவ்வித போதைப்பொருளையும் பயன்படுத்துவதில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொள்ளை சம்பவங்களுக்காக சிறிய வேன் ஒன்றை வழங்கிய வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளர், கொள்ளையிடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்த வர்த்தகர், அவரது உதவியாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெஸ்பேவ நிவுன்கம பிரதேசத்தில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவர் தனது வீட்டுக்கு முன்னால் பூப்பறித்துக்கொண்டிருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் மேற்படி குழுவினரை கைது செய்துள்ளனர்.
பிரதான சந்தேக நபரான 21 வயதான இளைஞன் பண்டாரகம யட்டியன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே அங்கவீனமான இராணுவ சிப்பாய், உள்ளிட்ட ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
