மிக மோசமான அமைச்சரவையே தற்போதைய அமைச்சரவை! - டிவ் குணசேகர ஆதங்கம்
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த நாடு இதுவரை கண்டிராத மோசமான அமைச்சரவை தற்போதைய அமைச்சரவை என்று இலங்கை கமியுனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளா் டிவ் குணசேகர குற்றுஞ்சாட்யுள்ளாா்.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் நடைமுறைக்கு மாறானவை மற்றும் குறுகிய நோக்குடையவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி, தேங்காய், சீனி, உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பிலான அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் தாங்கள் துளியும் துப்பற்றவர்களாகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற திட்டத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் செயற்படுவதும் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட நகைப்புக்குரிய ஒரு நடவடிக்கையாகும்.
இந்நிலையில், பணத்தை அச்சிட்டே அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2,000 பில்லியன் வரையில் பணம் அச்சீட்டு இருக்கிறாா்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri