இளைஞரொருவரின் மோசமான செயல் - முல்லைத்தீவில் வைத்து மடக்கி பிடித்த பொலிஸார்
அம்பாறை - பொத்துவில் பகுதியில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞரொருவர் தன் காதலியான 14 வயது சிறுமியை அழைத்து கொண்டு முல்லைத்தீவு, சிலாவத்தை மாதிரி கிராமப் பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார்.
குறித்த சிறுமியினை காணவில்லை எனப் பெற்றோர்கள் அம்பாறை - பொத்துவில் பகுதி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாவத்தை மாதிரி கிராமத்தில் 16 வயது பூர்த்தியாகாத சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞரும், சிறுமியும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பொலிஸ் பிரிவின் ஊடாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், இவர்கள் தொடர்பான அறிக்கைகள் அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
