நாயை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த பெண்
பொலநறுவை பிரதேசத்தில் நாய் ஒன்றின் மீது ரயில் மோதப்போவதை அவதானித்த பெண் ஒருவர் நாயை காப்பாற்றிய போது அவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
அயல் வீட்டு நாயை காப்பாற்றிய போது ரயிலில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பொலநறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த இரேஷா பிரசாங்கனி என்ற 45 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழப்பு
கடந்த 17ஆம் திகதி காலை 8.30 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கதுருவெலயில் உள்ள அவரது குடியிருப்புக்கு அருகில் விபத்தில் சிக்கியுள்ளார்.
அயல் வீட்டவரின் வளர்ப்பு நாய் வீட்டின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடுவதைக் கண்ட பெண், அப்போது ரயில் சத்தம் கேட்டு ரயில் பாதைக்கு ஓடி நாயைக் காப்பாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உறுப்பு தானம்
அத்தகைய நோயாளியின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளை தானமாக அளித்து மேலும் மூன்று நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அதற்கமைய, உறவினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பெறப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை மற்றும் கண்டி பொது வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றுமொரு நோயாளிக்கு மாற்றுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
