காணாமல்போனோர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இதுவே வழி! தேரர் ஒருவர் கூறிய கருத்து
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை பொது மன்னிப்பு ஒன்றை கேட்பதாலும் வழங்குவதாலுமே முடிவுக்கு கொண்டுவரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் பிரிவேன கல்வி பிரிவின் உதவிப் பணிப்பாளர் வண. கரவிலக்கொட்டுவ தம்மதிலக தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச தினத்தில் OMP Sri Lanka ஏற்பாடு செய்திருந்த உரைகள் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“யுத்தம் முடிவு பெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாது இருப்பது, எமது நாடு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முன்செல்லமுடியாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ், நஷ்ட ஈடு மட்டும் வழங்காது பொது மன்னிப்பு ஒன்றை கேட்பதாலும் வழங்குவதாலுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.
சர்வதேச ரீதியில் அவ்வாறே இதுமாதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam