2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இணையத்தளத்தில் பார்வையிடலாம் - தேர்தல் ஆணைக்குழு
2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தமது பெயர்கள் இருக்கின்றனவா என்பதை அறிய www.elections.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் கோவிட் தொற்று நோய் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை பதிவு செய்யும் படிவங்கள் வீடு வீடாக கொண்டு சென்று விநியோகிக்கப்படாது என்பதுடன் 2020 ஆம் ஆண்டு வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் பெயர்கள், 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை கிராம சேவர்களின் அலுவலங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri