மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்வு!
இலங்கையில் மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 230 ஆக வலுவடைந்ததையடுத்து நேற்றைய தினத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்திருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களின் படி மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் ஒன்றின் விற்பனை விலை இன்று 55.01 ரூபாவில் இருந்து 62.48 ஆகவும், பஹ்ரைன் தினார் 536.00 இலிருந்து 608.69 ஆகவும், கட்டார் ரியால் 55.30 லிருந்து 62.96 ஆகவும் உயர்ந்துள்ளது.
குவைத் தினார் ஒன்றின் விற்பனை விலை ரூ.665.21ல் இருந்து ரூ.755.43 ஆகவும், ஓமானி ரியால் ரூ.524.90ல் இருந்து 596.09 ரூபாவாகவும், சவுதி ரியால் ஒன்றின் விலை 53.86 ரூபாவில் இருந்து 61.16 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கணிசமான சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.