ஈரானின் செய்தி இணையதளங்களை முடக்கிய அமெரிக்கா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா,பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றுடனும், ஜெர்மனியுடனும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் ஏற்படுத்தியது.
ஆனால் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என்று அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அத்துடன் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அவர் 2018 மே மாதம் 8-ந் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரான் பொருளாதாரத்தில் பலத்த அடி விழுந்தது.
இதில் இருந்து அவ்விரு நாளுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டுள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றும் இந்தப் பகையில் மாற்றம் இல்லை. இந்தநிலையில் ஈரான் நாட்டின் செய்தி இணையதளங்களை அமெரிக்கா அதிரடியாக முடக்கி உள்ளது.
தவறான தகவல்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. இதனால் அந்த இணையதளங்களை அமெரிக்காவில் யாரும் பார்க்க முடியவில்லை.
அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த இணைய தளங்களில் அறிவிப்பு
வெளியாகி உள்ளது. அதில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.
மற்றும் வர்த்தக துறையின் முத்திரைகளும் பதிக்கப்பட்டுள்ளன.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri