சஜித் தலைமையில் ஆட்சியமைப்போம் - தலதா அத்துகோரள சவால்
சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியது உடைந்து, சிதறி போவதற்கு அல்ல எனவும் கட்டாயம் சஜித் பிரேமதாச தலைமையின் கீழ் அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அது குறித்து எவரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள(Thalatha Athukorala) தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, “நான்கு பேரின் புகைப்படத்துடன் “ ஐக்கிய மக்கள் சக்தி உடைகிறது” என்ற தலைப்பில் சிங்கள பத்திரிகை ஒன்றில்
செய்தி வெளியாகி இருந்தது. உங்களுடைய புகைப்படமும் காணப்பட்டதே?.” என்ற கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள பதிலளிக்கையில்,
ஐந்தாக உடைந்து. நான்கு பேரின் புகைப்படங்கள் மாத்திரமா இருந்தது?. ஐந்தாக உடைந்துள்ளது என்றால், ஐந்தாவது நபரின் புகைப்படத்தை பிரசுரியுங்கள். அதிகாலையில் எனது கணவர், என்னுடைய புகைப்படமும் இருப்பதாக கூறினார். ஐந்தாக உடைந்துள்ளதாம், ஐந்தாவது நபர் யார் எனவும் அவர் கேட்டார். இரண்டாம் பக்கத்தை பார்க்குமாறு நான் கூறினேன்.
பூமியை பிளந்து கொண்டு நாக பாம்பு வந்த நேரத்தில் இருந்து தம்மிக்க பாணி மருந்து தொடக்கம், மூட நம்பிக்கையை விதைத்து, நாட்டு மக்களை பயங்கரமான இருளில் தள்ளி, தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டவர்கள், தற்போது இப்படியான விடயங்களை புதிதாக உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, சஜித் பிரேமதாசவுடன் கட்சியில் இருந்து வெளியேறியது பிளவுப்படுவதற்காக அல்ல. எமது தலைவரின் தலைமையின் கீழ் நாங்கள் கட்டாயம் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை அமைப்போம். இது குறித்து எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளை வெளியிடும் போது எனது அழகான படத்தை வெளியிடுமாறு கோருகிறேன் என தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
