கொழும்புக்கான மேயர் வேட்பாளரை அறிவிக்காத ஐ.தே.கட்சி
கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்புமனுக்கள் இன்று கையளிக்கப்படடதுடன் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அணியில மேயர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என தெரியவருகிறது.
தேர்தலுக்கு பின்னர் மேயர் பதவிக்கான நபர் தெரிவு செய்யப்படுவார்
இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு தகுதியான நபரை கட்சி தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கை உட்பட முழு தேர்தல் செயற்பாடுகளிலும் வேட்பாளர்களின் செயல்திறனுக்கு அமைய மிகவும் பொருத்தமான நபர மேயர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலேயே பலத்த போட்டி இருக்கும் கூறப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையானது ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் மாநகர சபையாகும். அத்துடன் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அதிகளவில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
