ஹிஷாலினி விவகாரத்தில் திருப்பம்? - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி உயிரிழந்து விட்டதால் அவர் மீது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சிறுமி தனக்கு தானே தீவைத்து கொண்டுள்ளதாக வைத்தியரிடம் கூறியுள்ளதாகவும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். அதனை சாட்சியாக வைத்து வழக்கில் இது ஒரு தற்கொலை என்றே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊடகங்கள் ஹிஷாலினியை 15 வயது சிறுமி என்று கூறுகின்ற போதும் அவர் 16 வயது பூர்த்தி செய்த யுவதி என சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
