நாய்க்குட்டியால் வந்த வாய்த்தர்க்கம் - கொலையில் முடிந்த அவலம்
பலங்கொடையில் வீட்டில் வளர்த்த நாய் குட்டி ஒன்று காணாமல் போனமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிகேபொல பொலிஸ் பிரிவில் நாய் குட்டி காணாமல் போனமையினால் வாய்த்தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர் செயற்றிட்டம் ஒன்றில் பாதுகாவளராக செயற்பட்ட நபரிடம், நாய் குட்டி வளர்த்தவர் மோதலில் ஈடுபட்டு பாதுகாவளரை கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
நாய் குட்டி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இறுதியில் நாய் குட்டியின் உரிமையாளர் அந்த நபரை கொலை செய்துள்ளார்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் செய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
