அதிபர் ஆசிரியர் சம்பள போராட்டத்தில் உயிரிழந்த ஆசிரியைக்கு நாளை அஞ்சலி (Video)
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளைய தினம் (12) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
அண்மையில் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக மாத்தறை தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு பாடசாலை ஆசிரியையான வருணி அசங்கா அகாலமரணம் அடைந்தார்.
அவரின் அர்ப்பணிப்புக்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காலையில் 5 நிமிடங்கள்
அகவணக்கம் செலுத்தி அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திற்ப்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan