கோட்டாபய ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு! நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இனி வரும் காலங்களில் சில துறைகளில் வரி திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனக்கு அறியக்கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி தொகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வரிகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எமக்கும் உண்டு. வரியின் அளவு அதிகமாக உள்ளது.
ஆனால், ஏன் வரி நீக்கப்பட்டது என்று கேட்டுப் போராடினார்கள். அதுதான் கோட்டாபய ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. இன்று வரி விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயங்களில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எதிர்வரும் காலத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்று நான் அறிந்தேன். சில் துறைகளில். வரி தொகையில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.