கினியா நாட்டில் உதயமானது தமிழ் சங்கம்
நைஜீரியாவில் மையம் கொண்டுள்ள இலக்கிய அமைப்பான ''ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம்'' ஆப்பிரிக்காவில் உள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் ஒரு நோக்குடன் இந்த ஆண்டின் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
பிரபல எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், இலக்கிய உரையாடல்கள் ஒருங்கிணைப்பு என தன் சேவையை செம்மையாக செய்து வரும் ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம், தமிழ் சங்கங்கள் இல்லாத நாடுகளில் தமிழ் சங்கங்கள் அமைப்பதை இலக்காக நிர்ணயித்து வேலைகளை ஆரம்பித்தது.
அதன் முதல் படியாக ஆப்பிரிக்காவின் - கினியா நாட்டில் தமிழ் சங்கம் நிறுவப்பட்டுள்ளது.
கினியா தமிழ் சங்கம்
கினியா தமிழ் சங்கத்திற்கு ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடத்தின் நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அதியமான் கார்த்திக் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு சேவை அடுத்ததாக கேமரூன் நாட்டிலும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், கினியா தமிழ் சங்கம் ஒரு தனித்து இயங்கக்கூடிய அமைப்பாக ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடத்தின் வழிகாட்டுதலுடன் தன் பணியைத் தொடரும் என்றும் அதியமான் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |