இத்தாலியில் மாபெரும் சாதனையை படைத்த தமிழ் சிறுவன்
இத்தாலியில் நடந்த Vergani கோப்பை ஓபன் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 14 வயது இளம் செஸ் வீரர் பரத் சுப்பிரமணியம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது மிக உயரிய விருதாகவே பார்க்கப்படுகின்றது.
சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் பரத் சுப்ரமணியம் இத்தாலியில் புகழ்பெற்ற வெர்கானி கோப்பை செஸ் போட்டி நடைபெற்றதுடன்,இதில் சென்னை சிறுவன் பரத் சுப்ரமணியமும் கலந்துகொண்டுள்ளார்.
இப்போட்டியில் பரத் சுப்ரமணியம் மொத்தம் உள்ள ஒன்பது சுற்றுகளிலிருந்து 6.5 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக தொடரின் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்வதற்கான மூன்றாவது இலக்கையும் எலோ (Elo) புள்ளிகளையும் அவர் பெற்றார். அதாவது ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் எனில் 3 கட்ட கிராண்ட் மாஸ்டர் இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
போட்டிகளில் 2,500 (Elo) புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும். இதனை பூர்த்தி செய்தால் அந்த வீரருக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும். அதன்படி ஏற்கெனவே 2 கட்டங்களை பரத் சுப்பிரமணியம் பூர்த்தி செய்திருந்தார்.
இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் 3ஆவது கட்ட இலக்கையும் எட்டினார். அதேபோல 2,500 எலோ புள்ளிகளையும் அவர் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் அவருக்கு கிடைத்தது.
இதையடுத்து மற்றொரு தமிழரான செஸ் ஜாம்பவனான விஸ்வநாதன் ஆனந்த், பரத் சுப்ரமணியம் மிகவும் திறமைசாலியான சிறுவன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan