வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு
நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறுவதினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரண்டாவது நாளாக இன்றையதினமும் அவசர மருத்துவ சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளர்கள் மற்றும் கதிரியக்கவியலாளர்கள் நாளாந்த சேவையில் ஈடுபடவில்லை.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாட்டின் பல பாகங்களில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களும் ஆதரவளித்துள்ளனர்.
சுகாதார தொழில்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்வதால் செவ்வாய்கிழமைகளில் மாதந்தம் சிகிச்சை பெறும் ஊசி ஏற்றும் நோயாளர்கள், மருத்துவர்கள் தங்களை பார்வையிட்டாலும் மருந்துகளையோ ஊசிகளையோ ஏற்றிக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இதனால் வவுனியா மாவட்டத்தில் அதிகளவான மாதாந்த சிகிச்சை பெறும் நீரிழிவுநோயாளர்கள், சுவாச நோயாளர்கள், சிறுநீரக நோயாளர்கள், மார்பக புற்றுநோயாளர்கள், உயர்குருதி அமுக்கம் நோயாளர்கள், இதயநோயாளர்கள், நரம்பியல் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட தூரத்திலிருந்து ஆய்வுகூடப் பரிசோதனை உள்ளிட்டவைகளுக்கு வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.








Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
