கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு உதவிய இந்திய வம்சாவளி சட்டத்தரணி! ரகசியத்தை பகிரங்கப்படுத்திய விமல்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்ச தயரான போது அந்த கனவை தான் உட்பட தனது கட்சியும் தகர்த்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்து கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பசில் ராஜபக்ச தயார் நிலையில் இருந்ததாகவும், அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்ததாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தக் கனவை தானும் தனது கட்சியும் தகர்த்துவிட்டதாகவும் அதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்து கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதே பிரதான சவாலாக இருந்ததாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வழிமுறைகளை ஆராய்ந்த பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும், ஆனால் பசிலுக்கு தடைகள் இருப்பதாகவும் சட்டத்தரணி பின்னர் தெரிவித்ததாக வீரவங்ச தெரிவித்துள்ளார்.