சம்பந்தனின் மறைவுக்கு பிறகு கூட்டமைப்பின் நிலை! பிள்ளையான்
எம்.ஏ.சுமந்திரனின் தலைமைத்துவத்தை உறுதி செய்வதற்கான யாத்திரையாகவே “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி” வரையான பேரணியை பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளர். தமிழ் மக்களுக்கான நீதிகோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி ஒன்று கடந்த 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் முடிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் போராட்டம் செய்துள்ளனர். ஜனநாயக நாட்டில் எல்லோரும் எல்லாவற்றையும் செய்யலாம்.
குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டபோது பொத்துவிலில் ஒரு கதையை கதைத்தனர். காத்தான்குடி வந்ததும் வேறு ஒரு கதையை கதைத்தனர், ஏறாவூர் வந்ததும் இன்னொரு கதையை கதைக்கின்றனர்.
கருத்துகள் வேறு வேறு விதமாக இருக்கின்றன. முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்றதும் முஸ்லிம்களுக்கு சார்பாகவும், தமிழ் பிரதேசங்களுக்கு வந்ததும் தமிழர்கள் சார்பாகவும் கதைக்கின்றனர்.
இந்த பேரணியல் ஒரு நேரான கருத்தை சொல்லவில்லை. மொத்தத்தின் சம்பந்தனின் மறைவுக்கு பிறகு கூட்டமைப்பில் சுமந்திரனின் தலைமைத்துவத்தை உறுதி செய்வதற்கான யாத்திரையாகவே இந்த பேரணியை பார்க்கின்றேன்” என அவர் கூறியுள்ளார்.



