ஒலிம்பிக் வீரரை அவமரியாதை செய்த அரச ஊடகம் குறித்து அமைச்சர்கள் அதிருப்தி
ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் சார்பில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற யுபுன் அபேகோனை கடுமையாக விமர்சனம் செய்து செய்தி வெளியிட்ட அரச ஊடகம் தொடர்பில் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் பிரதான பத்திரிகையொன்று யுபுனின் தோல்வியை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தது.
நாம் எமது விளையாட்டு வீர வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தென் ஆசியாவின் வேகமான மனிதராக இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் என்பதனை மறந்துவிடக் கூடாது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச ஊடகமொன்றில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதும் வார்த்தைப் பிரயோகங்களும் வருத்தமளிப்பதாக ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு தெரிவாகின்றமையே ஓர் வெற்றியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊடகங்களை பயன்படுத்தி இவ்வாறு வீர வீராங்கனைகளை இழிவுபடுத்தும் சம்பவங்கள் குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்துமாறு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
