காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் : மனுவல் உதயச்சந்திரா

Missing Persons Mannar Sri Lanka Sri Lanka Government
By Ashik May 06, 2022 04:02 PM GMT
Report

நீதிக்காக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் போராட்டத்திற்கும், கோரிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

 மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இன்று(6) மதியம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பபில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றும் எவ்வித நியாயமான நீதியும் இன்றி தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது.

நீதிக்காக போராடிய 115 காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர் இறந்துள்ளனர்.அவர்களின் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.இவ்வாறானதொரு நிலையில் எந்த ஒரு அரசாங்கமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளோடு அக்கறையாக நடந்து கொள்ளவில்லை.

சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் உருவாக்கப்பட்ட நிலைமாறு கால நீதியின் அங்கமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் வந்த போது பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தி இவ் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் அழிக்கவில்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே தெரிவித்து வந்தனர்.

ஆனால் இவ் அலுவலகத்திலோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக பிரதேச செயலகங்களில் வழங்கப்படுகின்ற சான்றிதலினால் எவ்வித பயனும் இல்லாத நிலையில் தற்போதை OMP அலுவலகத்தின் முக்கிய பதவியில் உள்ளவர் பதவி விலகலை அறிவித்துள்ளார்.

ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். அவ்வாறான பதவியில் உள்ளவர்கள் OMP அலுவலகத்தில் சுதந்திரமாக இயங்க முடியவில்லை எனவும், நீதி அமைச்சின் தலையீடுகள் அதிகம் எனவும் போதிய நிதி ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு அர்ப்பணிப்போ இல்லை.

இந்த அலுவலகம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையும் செய்ய முடியாதுள்ளது. அவர் சுட்டிக்காட்டி இருப்பது OMP அலுவலகத்தின் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை காலமும் ஆமை வேகத்தில் இயங்கி விட்டு சர்வதேசத்திடம் இவ் அலுவலகத்தின் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக அரசாங்கம் தன் வழமையான பொய்யான அறிக்கைகளை சர்வதேசத்திடம் வழங்கி வருகின்றமை, இந்த மக்களின் எதிர்பார்ப்பு மேலும் மழுங்கடிப்பதாகவே உணர்கின்றோம்.

நீதிக்காக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் போராட்டத்திற்கும் கோரிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

நாடாளுமன்ற சட்ட மூலகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட OMP அலுவலகம் வினைத்திறனாக செயற்படவில்லை என்பதனை ஆதார பூர்வமாக விளக்கும் வகையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இவ்விடத்திற்கு குரல் கொடுக்க வேண்டும்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த வண்ணமே உள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கும் வரை நீதிக்கான பயணத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் ”  என குறிப்பிட்டுள்ளார். 


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US