திஸ்ஸ குட்டி ஆராச்சிக்கு பேச அனுமதி மறுத்த சபாநாயகர்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சிக்கு (Tissa Kutti Arachchi) இன்று (22) உரையாற்ற அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, (Rohini Kavirathna) நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையின் கீழ் ஆற்றிய உரைக்கு பதிலளிக்க குட்டி ஆராச்சி சில முறை சந்தர்ப்பத்தை கோரினார்.
ரோஹினி கவிரத்ன உரையாற்றிக்கொண்டிருக்கும் போது அவர் இந்த கோரிக்கை விடுத்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தனக்கு செய்த அவமதிப்பு பெண்களுக்கு செய்த அவமதிப்பாக கூறி, ரோஹினி கவிரத்ன, குட்டி ஆராச்சிக்கு மிக கடுமையாக பதிலை வழங்கி உரையாற்றினார்.
குட்டி ஆராச்சியின் பிறப்பு மாத்திரமல்லாது அவரது தாய், மனைவி பற்றியும் குறிப்பிட்டு மிக நிதானமாக ரோஹினி கவிரத்ன உரையாற்றியதுடன் குட்டி ஆராச்சியின் பேச்சை அங்கீகரிக்கின்றீர்களா என சபையில் இருந்த அமைச்சர்கள் பசில் ராஜபக்ச மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் வினவினார்.
அப்போது ரோஹினி கவிரத்னவுக்கு தான் பதிலளிக்க சந்தர்ப்பம் வேண்டும் என குட்டி ஆராச்சி, சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.
“இன்று முடியாது நாளை சந்தர்ப்பம் தருகிறேன், உறுப்பினர் அமைதியாக இருங்கள்” என சபாநாயகர், குட்டி ஆராச்சியை பார்த்து கூறியதை காண முடிந்தது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam