மகனின் கொடூரச் செயல்! வயதான தந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையான முறையில் தாக்கி 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அகோர செயலுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவரது மகனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan
