கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை - பெரிய நீலாவணை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர் தம்வசம் வைத்திருந்த 5 கிராம் 80 மில்லி கிராம் பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
72 மணித்தியால விசாரணை
இந்நிலையில், சந்தேக நபர் ஒய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகன் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதினை தொடர்ந்து 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் பல்வேறு போதைப்பொருளுடன் பல தடவை கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |