அடுத்த வருடம் நிலைமை மேலும் மோசமாகும்! - அரசாங்கத்தின் அமைச்சர் எச்சரிக்கை
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இன்று அதிகரித்துள்ளதாகவும் அடுத்த வருடம் இந்த நிலைமை மேலும் கடினமாகும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“அரசாங்கம் நிதிப் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இன்று நாம் வாங்கிய கடனுக்கான தவணை மற்றும் வட்டியை கட்ட மீண்டும் கடன் வாங்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு இன்று நம் நாடு சென்றுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து விட்டன என்பது எங்களுக்குத் தெரியும். இதை நாம் இப்போது எதிர்கொள்ள வேண்டும். இது நாளை முடிவடையும் என்று சொல்ல முடியாது.
இந்த நிலை அடுத்த ஆண்டு இன்னும் கடினமாக இருக்கலாம். அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுவதை நாம் அறிவோம். ஆனால் செய்வதற்கு ஒன்றுமில்லை. தற்போது வீடுகள் கட்டுவது கனவாகி வருகிறது. ஒவ்வொரு பொருளின் விலையும் உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து எதிர்கொள்வோம்.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று உலக உணவுத் திட்டம் கணித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 6 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
