ஜனாதிபதியின் யோசனையால் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மீதே தற்போது நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரையும் அரசியலில் பாதுகாப்பதாக மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை காரணமாக அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. வீரவங்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதால், உருவான அரசியல் நெருக்கடிக்கு இடையிலேயே ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கத்தில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி பேச ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அந்த கட்சியின் தலைமை கடந்த செவ்வாய் கிழமை பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்டு, ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள யோசனைகளையும் முன்வைத்தது.
இதனையடுத்து இடத்திற்கு ஏற்றவாறு செயற்பட்ட ஜனாதிபதி, சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவது தொடர்பான யோசனையை முன்வைத்தார். எதிர்வரும் 23 ஆம் திகதி இந்த சர்வக் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது இந்த சர்வக் கட்சி மாநாட்டின் பங்காளி. இதன் காரணமாக அவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவது பற்றியோ, அமைச்சு பதவியை துறப்பது குறித்தோ உடனடியான முடிவுகளை எடுக்க முடியாது.
இதன் காரணமாகவே அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் சர்வக்கட்சி மாநாடு தொடர்பாக மகிழ்ச்சியாக பேசி வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடத்திற்கு இடம் முன்வைக்கும் யோசனைகளை சர்வக் கட்சி மாநாட்டில் முன்வைக்க முடியும் என அமைச்சர் அமரவீர கூறியிருந்தார்.
சர்வக்கட்சி மாநாடு என்பது குறுகிய காலத்தில் முடிந்து விடும் ஒன்றல்ல, நீண்டகாலத்திற்கு நீண்டு செல்லக் கூடியது.
இதனால், பிசாசை கட்டி வைத்தது போல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சர்வக் கட்சி மாநாடு முடியும் வரை அரசாங்கத்திற்கு இருந்தே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri